Technology

அனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச டேட்டா

புதுடெல்லி:
இந்திய டெலிகாம் நிறுவனமான ஏர்செல் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘ஏர்செல் குட்நைட்ஸ்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்கீழ் அனைத்து ஏர்செல் பிரீபெயிட் வாடிக்கையாளர்கலுக்கும் இலவச டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் வழங்கும் இலவச டேட்டாவினை பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் அதிகாலை 3.00 மணி முதல் காலை 5.00 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தை பயன்படுத்தி ஏர்செல் 2ஜி / 3ஜி வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் வீடியோ, திரைப்படம், மியூசிக் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
முதல் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையின் கீழ் தினமும் 500 எம்பி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்செல் அறிவித்துள்ள இலவச சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் என ஏர்செல் அறிவித்துள்ளது.