Technology

முதன் முறையாக வளிமண்டலத்துடன் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

 பெர்லின்:

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.

இப்புதிய கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற கிரகங்களை ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் விசே‌ஷம் என்னவென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது.

இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

இது சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது பற்றிய ஆய்வு நடக்கிறது.