Technology

ஸ்நாப்சாட் செயலியில் புதிய வசதி: இனி போட்டோ, வீடியோக்களை தேடலாம்

புதுடெல்லி:
பிரபல குறுந்தகவல் செயலியான ஸ்நாப்சாட் அதன் பனயாளிகளுக்கு பொதுவாக (public) பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை தேடுவதற்கான வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை பதிவு செய்வதை கடந்து நண்பர்கள் பதிவு செய்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையளர்களை அதிக புகைப்படங்களை எடுத்து அதனினை எடிட் செய்யும் வசதியை வழங்கியதை தொடர்ந்து ஸ்நாப்சாட் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்நாப்சாட்டில் ‘ஸ்நாப்ஸ்’ மற்றும் ‘அவர் ஸ்டோரி’-களை தேடுவதற்கு பயனாளிகள் புதிய ஸ்டோரீஸ் உருவாக்க கோரும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும் என அந்நிறுவனத்தின் வளைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்நாப்சாட்டில் ஸ்நாப்ஸ் மற்றும் அவர் ஸ்டோரி என அழைக்கப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.
அவர் ஸ்டோரி ஆப்ஷன் இந்த செயலியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஸ்டோரீஸ் வசதியை தழவி உருவாக்கப்பட்டதாகும். ஸ்டோரீஸ் வசதியில் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் மறைந்து விடும். அவர் ஸ்டோரீஸ் ஆப்ஷனில் பயனாளிகள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.
புதிய வசதியை வழங்கும் அப்டேட் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் பயனாளிகள் உலகின் பிரபல நிகழ்வுகளின் புகைப்படங்களை செயலியில் தேடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.