Technology

இனி வாட்ஸ் ஆப்பில் தப்பான மெசேஜ் அனுப்பிட்டா பயப்பட தேவையில்லை..!

வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் மெசேஜை, படிப்பதற்கு முன்னரே அழிக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

உலகின் முக்கிய சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப், தன்னுடைய பயனாளர்களுக்காக பல்வேறு புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பயனாளர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய மெசெஜை, எதிர் முனையில் உள்ள ஒருவர் பார்க்கும் முன்னரே அந்த மெசேஜை அழிக்கவோ அல்லது எடிட் செய்யவோ கூடிய புதிய வசதியை விரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த புதிய வசதியின்படி, ஒரு மெசெஜ் அனுப்பப்பட்ட 5 நிமிடங்களுக்குள் மட்டுமே அதனை அழிக்க முடியும்,எடிட் செய்ய முடியும். தற்போது இந்த புதிய வசதிகள் குறித்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. எனவே கூடிய விரைவில் வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுமட்டுமல்லாமல் பயனாளர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து வாட்ஸ் ஆப்பில் குறிப்பிடும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.