2030-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 15 ஆண்டுகளில் அமெரிக்காவால் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்க முடியாது. சீனாவின் பொருளாதாரம் ஆனது இருமடங்கு உயரும்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் மந்தநிலையை அடையும் என்று அமெரிக்க விவசாயட் துறை கணித்து உள்ளது. 189 நாடுகளின் தகவல்களை கொண்டு கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. 2030-ம் ஆண்டில் சீனாவில் உள்நாட்டு உற்பத்தியானது அமெரிக்காவை மிஞ்சும் என்று அமெரிக்க விவசாயத்துறை வெளியிட்டு உள்ள சமீபத்திய தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரமானது 24.8 டிரிலியன் அமெரிக்க டாலர் என்ற நிலையிலே இருந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 23 சதவீதமாக உள்ளது. இதுவே 2030-ம் ஆண்டில் 20 சதவீதமாக சரிந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2030-ம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். தற்போது 8-வது இடத்தில் உள்ள இந்தியா வேகமாக உயர்ந்து 3-வது இடத்தை பிடிக்கும். இதனையடுத்து ஜப்பான் நான்காவது இடத்தை பிடிக்கும், ஜெர்மனி மற்றும் பிரேசில் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளும். இந்த நாடுகளைவிட பரப்பளவில் பெரியதாக இருக்கும் இந்தியா, அதிக திறன்கொண்ட தொழிலாளர்களையும் கொண்டு உள்ளது. இதன் காரணமாக இந்தியா வளர்ச்சி அடையும். ஆசிய நாட்டை தவிர்த்து ஆப்பிரிக்க நாடுகளும் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார பட்டியலில், அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா 18-வது இடத்திற்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷியா 2015-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5 சதவிகிதம் இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷியா 2030-ம் ஆண்டில் 10 வது இடத்தை பிடிக்கும். கரீபியன் தீவு நாடான ஜமைக்காவும் இழப்பை சந்திக்கும், வரிசையில் 13 இடங்களுக்கு பின்னுக்கு தள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.