இந்த கோட்டை முதலில் கடற் திருடர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஒரு உளளூர் மராத்திய-மீனவர் ராஜாராம் பாட்டீல் என்பவரால் சிறிய அளவில் 15 ஆம் நூற்றாண்டில்கட்டப்பட்டது.இது "Medhekot" என்று அழைக்கப்படுகிறது. புர்ஹன் கான் என்பவரால் அசல் கோட்டை இடிக்கப்பட்டு வெல்ல இயலாத பலம் பொருந்திய மிக பெரிய கோட்டை கட்டப்பட்டது. இது 22 ஏக்கர் பரப்பளவிலான (சுமார் 858 சதுர மீட்டர்) கல் கோட்டை. இக்கோட்டை அரபு தீவு அதாவது 'ஜன்சீர மக்ராப் ஜசீரா' என்று அழைக்கப்பட்டது.சித்தி அம்பர்சேதக் கோட்டையின் தளபதி ஆக நியமிக்கப்பட்டர்.அவர் மிகபெரிய வீரர். போர்த்துகீசியம், ஆங்கிலேயம் மற்றும் முகலாயர்களின் பல முயற்சிகளையும் மீறி சித்தி அம்பர்சேதக் கோட்டை ஐ பாதுகாத்து வந்தார்..இக்கோட்டை இல் திறக்கும் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. மணல் கல் மற்றும் ஒருவித கலவை கொண்டு இக் கோட்டை கட்ட பட்டிருந்தது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் தலைமையில் மராட்டியர்கள் பல்வேறுமுயற்சிகள் மேற்கொண்டும் அனைத்திலும் தோல்வி கண்டனர். அவர்களால் 12 மீட்டர் கிரானைட் சுவர்கள் கடக்க முடியவில்லை. அவரது மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் கோட்டை சுரங்கப்பாதை வழியில் முயற்சி மேற்கொண்டார் ஆனால் அவரதுமுயற்சியும் வெற்றிபெறவில்லை.இக்கோட்டை இல் சுமார் 500 பீரங்கிகள் இருந்தன . எந்த எதிரிகளும் நெருங்க முடியாத அளவு மிகவும் பாதுகாப்பாக அமைக்க பட்டிருந்தது. இக் கோட்டையின் சிறப்பு Kalalbangdi, Chavri மற்றும் லண்ட கசம் என்ற 3 பிரம்மாண்டமான பீரங்கிகள் உள்ளது.எதிரிகளால் இதன் நுழைவு வாயில் ஐ கண்டுபிடிக்க முடியாத அளவு மிக நுணுக்கமான கட்டபட்டிருந்தது. அன்று முதல் இன்று வரை கடலில் அழியாமல் நிலைத்து நிற்கும் இக்கோட்டை சரித்திரத்தின் வியப்பு...