Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அத்துமீறி நிலத்தை அபகரிக்கும் பாக். ராணுவத்தை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டம்

Advertisements
 இஸ்லாமாபாத்:

இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அந்நாட்டு ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார் எழுவதுண்டு.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோட்லி பகுதியில் வசிக்கும் மக்களின் பூர்வீக நிலங்களை ராணுவத்தினர் வல்லுக்கட்டாயமாக அபகரிப்பதாக அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான கோஷங்களை மக்கள் எழுப்பினர்.

Exit mobile version