மனிதர்கள் பூமியைவிட்டு வெளியேற வேண்டிய கட்டடாயம் விரைவில் வரப்போவதாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
விரைவில் ஆஸ்ட்ராய்டு என்ற விண் பாறைகள் பூமி மீது மோதவும், அதனால் சூரியன் பூமியை விழுங்கிவிடவும் வாய்ப்பு இருப்பதாக ஹாக்கிங் அதிர்ச்சியளிக்கும் தகவலைக் தெரிவித்துள்ளார்.
இது நடந்தால் பூமி இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். இதனைத் தவிர்க்க மனிதர்கள் பூமியை விட்டுவிட்டு சூரியக் குடும்பத்திலிருந்து தொலைதூரத்தில் உள்ள வேறு கிரகங்களுக்கு செல்வதே இந்த அபாயத்திலிருந்து தப்புவதற்கான வழி. இதனால், ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் காஸ்மோலஜி உள்ளிட்ட விண்வெளி பற்றிய துறைகளில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்.
பருவநிலை மாற்றம், இயற்கை வளங்களின் அழிவு ஆகியவை நம்மை பூமியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தும். இன்னும் 30 வருடங்களில் பூமியிலிருந்து வெளியேற வேண்டியிருக்கலாம். இதற்கு ஏதுவாக, விஞ்ஞானிகள் லூனார் பேஸ் என்ற விண்வெளி காலனிகளை அமைக்க வேண்டும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.