கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்து அதன்பிறகுதான் தியேட்டர்களுக்கு வந்தது. அதோடு, அந்த படத்தில் முஸ்லீம்களின் மனதை புண்படுத்தும்படியான ஏராளமான காட்சிகளை கத்தரித்து விட்டனர்.
கமலும் அப்போது இருந்த சூழ்நிலையில் அதற்கு விட்டுக்கொடுத்தார். ஆனால் அதேபோன்று இப்போது வைஷ்ணவர்களை புண்படுத்தும்படியான பாடல் காட்சிகள் அவரது உத்தமவில்லன் படத்தில் இருப்பதாக சொல்லி அப்படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது விஷ்வ இந்து பரிஷத்.
இந்நிலையில், அதுகுறித்து கமல் அளித்துள்ள ஒரு பேட்டியில், உத்தமவில்லனில் யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெறவில்லை என்பதை அடித்து சொல்வேன்.
அதனால் யாரும் இந்த சர்ச்சைகளை உண்மை என்று நம்ப வேண்டாம். மேலும், விஸ்வரூபம் படம் வந்த நேரத்தில் சில இன்னல்களால் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை நீக்குவதற்கு சம்மதம் சொன்னேன்.
ஆனால் இந்த முறை அப்படி எந்தவொரு காட்சியிலும் கத்தரிக்க விடமாட்டேன். எப்படி படத்தை எடுத்தேனோ அப்படியே ரசிகர்களின் பார்வைக்கும் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.