நவம்பர் பத்தாம்தேதி தீபாவளி நாளில் வெளியான வேதாளம் படத்தின் முதல்நாள் வசூல் 15,5 கோடி என்று சொல்லப்பட்டது. இரண்டாம்நாள் வசூல் சுமார் ஒன்பதுகோடி என்று சொன்னார்கள். இப்படியே ஒவ்வொரு நாளுக்கும் இவ்வளவு வசூல் என்று கணக்குப்போட்டு இன்றைக்கு, இதுவரை அறுபதுகோடிரூபாய் வசூலித்துவிட்டது என்று செய்திகள் வரத்தொடங்கிவிட்டன.
முந்தைய எல்லாச் சாதனைகளையும் முறியடித்துவிட்டது என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வேதாளம் படவசூல் நிலவரம் பற்றி இதுவரை எந்த விநியோகஸ்தரும் திரையரங்குஉரிமையாளரும் பேசியதாகத் தெரியவில்லை. தற் போே து இது பற்றி தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறும் போேது “படம் முதல்நாளிலிருந்து நன்றாகப் போயக்கொண்டிருக்கிறது. நல்லவசூல் இருப்பதாக எல்லாப்பக்கமிருந்தும் சொல்கிறார்கள். ஆனால் வெளியில் சொல்லப்படுகிற இந்தத்தொகையெல்லாம் எப்படி வருகிறது? என்று எங்களுக்கே தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் எங்களுக்கே சரியான கணக்கு தெரியாது. ஒரு வாரம் ஒடியபிறகு கேட்டால் எவ்வளவு தொகை என்று கணக்குச் சொல்லலாம். வசூலைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதேபோல முதல்நாள் வசூலை வைத்துக்கொண்டு அடுத்த நாளைக் கணக்கிட முடியாது.
ஒவ்வொரு காட்சிக்கும் நிலைமை மாறும். இன்றைக்குச் சென்னையில் மழை இல்லை, தியேட்டர்களில் பெரியகூட்டம் இருக்கிறதென்று சொல்கிறார்கள். மழைபெய்துகொண்டிருக்கும் ஊர்களில் கேட்டால் இங்கிருப்பதைவிடக் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். உண்மை அப்படியிருக்க இப்படிப் பொத்தாம்பொதுவாக எழுதுவது எப்படி என்று தெரியவில்லை. அதுவும் டிவிட்டர் போன்ற சமுகவலைதளங்கள் வந்தபிறகு ஆளாளுக்கு எழுதத் தொடங்கிவிட்டார்கள். வெளிநாடுகளில் இருப்பது போல் கம்யூட்டரைத் தட்டினால் வசூல் உட்பட எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்கிற நிலை இங்கு இல்லை, அப்படி வந்தால் நன்றாக இருக்கும்” என்கிறார் ஏ.எம்.ரத்னம்.