கிக் ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஆன்லையனில் படங்களை தறவிரக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு சொர்க்ப்ரியாக திகழ்ந்து வந்தது.
சுமார் 100 கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்ததை அடுத்து அமெரிக்க நீதிதுறையால் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் நிறுவனர் ஆர்டம் வாலின் என்பவர் தகவல் திருட்டு, பண மோசடி ஆகிய குற்றங்களின் கீழ் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்டம் வாலியின் ஆப்பிள் போன் மற்றும் ஐகிளவுட் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டிபிடித்து, அவரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.