ராமாயண காலத்தில் கடல் தாண்டி இலங்கை செல்வதற்காக வானர வீரர்களால் கடலில் கற்கள் கொண்டு பாலம் அமைக்கப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு சான்று பகிரும் வகையில் ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில், தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்ட சில கற்கள் இருக்கின்றன. அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கற்களை மிதக்க விட்டிருக்கிறார்கள்.
இன்னும் சில கற்கள் அங்கே வருவோர் கைகளால் தொட்டுப் பார்ப்பதற்காகத் தனியே வைக்கப்பட்டிருக்கின்றன.