Technology

ஜியோவை எதிர்கொள்ள ஐடியாவின் திடீர் முடிவு

புதுடெல்லி:
பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஐடியா செல்லுலார் நிறுவனமும் தனது ரூ.348 திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. புதிய அறிவிப்பின் படி இருமடங்கு டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த சலுகை 4ஜி கைப்பேசி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ போட்டியை எதிர்கொள்ள பாரதி ஏர்டெல், வோடபோன் போன்ற போட்டி நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ஐடியாவின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பி.எஸ்.என்.எல் அறிவித்த ரூ.339 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, அனிலிமிட்டெட் பி.எஸ்.என்.எல் டூ பி.எஸ்.என்.எஸ் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. வோடபோனின் ரூ.342 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.345 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இந்தியாவில் இலவசமாக வழங்கப்பட்டதால் அறிமுகமான குறைந்த காலகட்டத்திலேயே ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜியோவின் மலிவு விலை சேவைகள் 12-18 மாதங்களுக்கு வழங்கப்படலாம் என டெலிகாம் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.