புதுடெல்லி:
இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய சினிமவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
2016 ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். இந்த விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே
இந்திய திரையுலகின் உயரிய விருதை வென்றுள்ள கே.விஸ்வநாத் ஏற்கனவே பல விருதுகளை குவித்தவர். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகிய படங்களை இயக்கியவர். தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ மற்றும் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ராஜபாட்டை’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.விஸ்வநாத் நடித்துள்ளார்.