நோயாளிகளின் புற்றுநோயை கண்டுபிடிக்க மருத்துவர்களுக்கு புறா உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆம் புறாக்கள் நேரடியாக புற்றுநோயை கண்டுபிடிப்பது இல்லை. ஆனால் நோயாளியின் ஸ்கேன், X-Ray ஆகியவற்றை புறாக்களிடம் காட்டும் போது அது சரியான புற்றுநோய் கட்டிகளை கண்டு பிடித்து விடுகின்றது.
புறாக்களின் இந்த ஆற்றல், மருத்துவர்களின் கணிப்பை விட மிக அதிகமாக உள்ளது. புறாக்களின் கணிப்பு 80% சரியானதாக உள்ளதாகவும், இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் புறாக்கள் வெகுவாக உதவுகின்றது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.