வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் அவ்வப்போது பூமிக்கு பறக்கும் தட்டுக்கள் மூலம் வந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
இந்நிலையில் 20 ஆண்டுகளில் ஏலியன்களை கண்டுபிடித்தே தீருவோம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதில் இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளின் நிலை குறித்து கண்டறிய முடியும். இதற்கு ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ் கோப் மற்றும் சக்தி வாய்ந்த உபகரணங்கள் மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது