தோட்டங்களில் வளரும் களைச்செடிகளைக் கொல்லும் புதிய ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் மனிதனைப் போலவே சிந்தித்து செயற்படும் விதத்தில் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அன்றாட வாழ்க்கையை எளிமையாக்க பல்வேறு தேவைகளுக்கான ரோபோக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோட்ட வேலையைச் செய்யவும் குட்டி ரோபோ வந்தாச்சு.
டெர்டில் எனப்படும் இந்த ரோபோவை ஃபிராங்கிளின் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது இந்த ரோபோ. இதனைப் பயன்படுத்தி தோட்டத்தில் முளைக்கும் களைகளை கொல்ல முடியும் என்பதால் கிருமிநாசினிகள் பயன்படுத்த அவசியம் இருக்காது. என்று கூறப்படுகிறது.
கிக்ஸ்டார்டர் இணையதளத்தில் இதற்கான விளம்பரம் தற்போது இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை ரூ.15 ஆயிரம் வரை இருக்கலாம்.