இந்தியன் ரயில்வே வெப்சைட்டில் பிஎன்ஆர் நிலை, இருக்கை விபரம், ரயில் விவரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள அடிப்படை கூட்டம், கழித்தல் கணக்கு தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
http://www.indianrail.gov.in/enquiry/PnrEnquiry.html எனும் இந்தியன் ரயில்வே இணையதளம் பீட்டா வெர்ஷனில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் அடிப்படை கணிதம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை டைப் செய்யவேண்டும் என்பது போல் இருந்தது. தற்போது இரண்டு எண்களை கூட்டி அல்லது கழித்து விடை அளிக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் தகவல் கிடைக்கப்பெறும்.
உதாரணமாக 544-68=? அல்லது 899+70=? என்று கேள்விகள் கேட்கப்படுகிறது. சரியான பதில் அளித்தீர்கள் என்றால் தகவலை பெறலாம். கணக்கில் வீக்கானவர்கள் கையில் கால்குலேட்டர் உடன் வெப்சைட்டை ஓபன் செய்யவும். ஆனால் இந்த நடைமுறையால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.