ஐபோன்/ஐபாட் பயன்பாட்டாளர்களுக்கு அதன் ஸ்டோரேஜ்தான் மிகப் பெரிய தலைவலி. இந்நிலையில், ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் அதிக ஸ்டோரேஜ் பெற வழிவகை செய்கிறது.
ஆப்பிள் போனில் புகைப்படங்கள், வீடியோக்கள், அப்ளிகேஷன்கள் அதிக இடத்தை அக்கிரமிப்பதால் ஐபோனின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், விரைவிலேயே ஸ்டோரேஜ் பிரச்னை வருகிறது.
ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள ஐஓஎஸ் 11-ல் ஸ்டோரேஜுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஐபோனில் அதிக இடம் அக்கிரமிக்கப்படுவதை அறியவும், அதனை எளிதாக கட்டுப்படுத்தவும் முடியும் என்பதை ஐபோன் பயனாளி ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐஓஎஸ் 11-ல் ரிவேம்ப்ட் (புதுப்பிக்கப்பட்ட) ஸ்டோரேஜ் பிரிவை பார்த்தால், எது அதிக இடத்தை பிடிக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அதன்படி, அதிக இடத்தை பிடித்திருக்கும் மெசேஜ் ஆப்-ல் இணைக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்களை நீக்கிவிடலாம். ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் உரையாடல்களையும் அழித்துவிடலாம்.
தற்போதுள்ள ஐபோன்களில் பயனர்கள் ஒவ்வொரு உரையாடலாக தேர்வு செய்து தான் அழிக்க வேண்டும். ஆனால், ஐஓஎஸ் 11-ல் மிகவும் எளிமையாக நிறைய உரையாடல்களை மொத்தமாக நீக்கலாம். ஐஓஎஸ் 11, ஸ்டோரேஜ் இடத்தை விரிவு செய்துக் கொள்ள புதிய வசதிகளை கொண்டிருப்பதாக மேக்ரூமர்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டோரேஜ் பிரச்னையால் அவதிப்படும் அனைத்து ஐபோன் பயனர்களிடம் இந்த புதிய வசதி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட்கள் மூலம் ஐபோன் ஸ்டோரேஜை கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.