கூகுள் நிறுவனம் தனது ஜீமெயில் மொபைல் அப்ளிகேஷனில் பயனர்களின வேலையைச் சுலபமாக்கும் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜீமெயில் மின்னஞ்சல் சேவைஉலகம் முழுவதும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில ஒன்றாக உள்ளது. இதன் மொபைல் அப்ளிகேஷனில் கூகுள் நிறுவனம் பல புதிய வசதிகளைப் புகுத்தி வருகிறது.
அதன் அங்கமாக, ஜீமெயில் மொபைல் அப்ளிகேஷனில் ஸ்மார்ட் ரிப்ளை என்ற புதிய அம்சத்தை இணைத்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுக்கான அப்ளிகேஷனில் சமீபத்திய அப்டேட் மூலம் இந்த வசதி கிடைக்கும்.
இதன் மூலம், மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது எளிதாகிறது. பொதுவாக அதிகம் பேர் பரவலாக பயன்படுத்தும் பதில்களை ஜீமெயில் பரிந்துரைக்கும். இதனால், டைப் செய்ய அவசியமில்லாமல், தயாராக பரிந்துரைக்கும் பதில்களில் ஒற்றை அனுப்பிவிடலாம். மெசேஜ் அனுப்புவதில் உள்ள டெம்பிளேட் மெசேஜ் போலவே இது இருக்கும்.
பல புதிய அப்பேட்களை அறிமுகம் செய்துவரும் கூகுள் அண்மையில் ஜீமெயில் மூலமாகவே பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.