பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் இனி உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம்.
முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் படி, பேஸ்புக் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின் உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக், இந்த ஆண்டின் இறுதிக்குள் 200 கோடி வாடிக்கையாளர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.