கடன் சுமையில் கடுமையாக சிக்கித்தவிக்கும் ஏர்-இந்தியா தனியார் மையமாக மாறுவதை பைலட்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்கும் முதன்மையான கருதப்படுவது ஏர்-இந்தியா நிறுவனமாகும். கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர்-இந்தியா கடந்த 2012ம் ஆண்டு தனது ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்பு செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சம்பளத்தை குறைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் பணிப்புரிந்து வந்தனர்.
இந்நிலையில் ஒருகட்டத்தில் சம்பளம் கொடுப்பதையே ஏர்-இந்தியா நிறுவனம் நிறுத்தியது. இதனால் தவித்த ஊழியர்கள் பலமுறை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஏர்-இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
முதலில் அதிர்ச்சியடைந்த ஏர் இந்தியா ஊழியர்கள், பின் தனியாரிடம் மாறினால் சம்பள் பிரச்சனை இருக்காது என்பதால், இத்திட்டத்தை அவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், நிலுவையில் உள்ள சம்பளத்தை கொடுத்து விட்டு, தனியாருக்கு ஏர்-இந்தியாவை தாரைவாருங்கள் என ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.