Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இயற்கை சூழலில் ஏசி இல்லாத தலைமையகம் :அசத்தும் ஆப்பிள்

கலிபோர்னியா : சர்வதேச அளவில் பல்நோக்கு தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், கலிபோர்னியா மாகாணத்தின் கியூபர்டினோ பகுதியில், முழுவதும் சோலார் சக்தியின் உதவியுடன், மரங்கள் சூழ முழுவதும் இயற்கை எழிலுடன் புதிய தலைமையகத்தை அமைக்கிறது.

 

சோலார் சக்தி அமைப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் முதலாவது தலைமையகம் தெற்கு கலிபோர்னியாவின் இன்டர்ஸ்டேட் 280 பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இரண்டாவது தலைமையகம், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் விருப்பத்தின்படி, முழுவதும் சோலார் சக்தி அமைப்புடனும், தலைமையகத்தை சுற்றிலும் மரங்கள் நிறைந்த இயற்கை சூழலுடனும் அமைக்கப்படுகிறது.

175 ஏக்கர் பரப்பளவில், அமையவுள்ள இந்த புதிய தலைமையகத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.

முழுக்க முழுக்க சூரிய ஒளி சக்தியின் மூலம் மின்சார வசதி செய்யப்பட உள்ள இந்த தலைமையகத்தில், ஏ.சி. வசதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பதிலாக, வளாகம் முழுவதிலும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, அந்த வளாகத்தின் வெப்பநிலையை பேணிக்காக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காற்று பரிமாற்றத்திற்காக, கண்ணாடி பிரதிபலிப்பான் மூலமான அமைப்பில் கேபின்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த தலைமையகத்தின் உள்ளே ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும்வகையிலான ஹில்டாப் தியேட்டருக்கு ஸ்டீவ் ஜாப்ஸின் பெயர் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version