நேரம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகர் நிவின்பாலி. அதையடுத்து மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது. விளைவு, இப்போது 5 தமிழ்ப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர். அதோடு மேலும் சில டைரக்டர் களும் அவரிடம் கதை சொல்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், தற்போது நிவின்பாலி என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்பதை விசாரித்தபோது, பிரபுதேவாவின் நிறுவனம் தயாரிக்கும் படம், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தை தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம், கெளதம்மேனன் உதவியாளர் இயக்கும் படம் உள்பட 5 படங்களில் தற்போது அவர் கமிட்டாகியிப்பதாக சொல்கிறார்கள். மேலும், நிவின்பாலி நடிக்கும் எல்லா படங்களும் மலையாள சினிமாவையை மனதில் கொண்டு தமிழ்-மலையாளம் என இருமொழிப்படங்களாகத்தான் தயாராகிறதாம்.
அதோடு, இதுவரை நிவின்பாலி மலையாளத்தில நடித்த படங்கள் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில, தமிழில் அவர் நடிக்கும் படங்கள் இங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களைப்போன்று மெகா பட்ஜெட்டில் தயாராகிறதாம்.