Cinema Entertainment

தனது சாதனையை முறியடிக்க ‘கபாலி’யை தயார்படுத்தும் மோகன்லால்..!

தலைப்பை படித்ததுமே மோகன்லால் நடித்துவரும் ‘புலி முருகன்’ பட டைட்டிலுக்கு பதிலாகத்தான், ‘கபாலி’ என தவறுதலாக சொல்லிவிட்டோமோ என நிச்சயம் சந்தேகம் வரும் உங்களுக்கு. தெரிந்தேதான் சொல்லியிருக்கிறோம். அதற்காக மோகன்லாலுக்கும் கபாலிக்கும் என்ன சம்பந்தம் என அதிகம் குழம்பவும் வேண்டாம். கேரளாவில் ‘கபாலி’ படத்தை திரையிடும் உரிமையை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் சுமார் 8.6 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளது. இந்தப்படத்தை கைப்பற்றியதன் பின்னணியில் மோகன்லாலுடன் அவரது மைத்துனர் சுரேஷும் ஆசிர்வாத் சினிமாஸின் முக்கிய தூணான ஆண்டனி பெரும்பாவூரும் தான் இருக்கின்றனர்..
இந்தப்படத்தை ஒரு பெட் கட்டிவிட்டுத்தான் வாங்கியுள்ளனர்.. அதாவது இதுநாள் வரை மோகன்லால்-விஜய் நடித்த ‘ஜில்லா’ படம் 200 தியேட்டர்களில் வெளியானதுதான் கேரளாவில் அதிகபட்ச சாதனையாக இருந்து வருகிறது. இந்தமுறை கபாலி’யை 250 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.. இதுமட்டுமல்ல பெருநகரங்களில் ‘கபாலி’யை தினசரி 8 காட்சிகள் திரையிடவும் புதிய சிஸ்டம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்களாம். இதன்படி அவர்கள் போடும் கணக்கு கேரளா மொத்தமும் சேர்த்து முதல்நாள் வசூலாக 7.5 கோடி ரூபாய் வசூலிக்கவேண்டும் என்பதுதான். இதற்கு முன்பு மோகன்லால் பட அதிகபட்ச ஒருநாள் வசூலே 2.5. கோடி தான்.. ஆக தனது சாதனைகளே முறியடிக்க வலுகட்டாயமாக ‘கபாலி’யை கேரளாவுக்கு அழைத்துள்ளார் மோகன்லால் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

image