ரசிகர்களை தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தும் பல நடிகர்களை பார்த்திருக்கிறோம். உதாரணமாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று 20 ஆண்டுகளாக சொல்லி கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரம், இவர் பட பாடல்கள் வேண்டுமானால் தமிழ் மக்களுக்காகவே அவர் என்ற பிம்பத்தை உருவாக்குமே தவிர இன்று வரை அவர் மக்களுக்காக எதுவும் செய்தது இல்லை. அப்பாவால் சினிமா உலகிற்கு வந்து அவர் அப்பா முயற்சியால் பெரிய இடத்தை அடைந்திருக்கும் அவர், தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றி தன்னுடைய சுய நல கண்ணோட்டத்தை அனைவருக்கும் அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்.
இவ்வாறு சுய நல வாதிகளுக்கு மத்தியில் தன்னால் தன் ரசிகன் பாதை மாறி போகின்றான் எனவே ரசிகர் மன்றம் தேவை இல்லை என அனைத்து ரசிகர் கலைத்தார். தன் ரசிகர்களிடம் அவர் சொன்ன அன்பு கட்டளை “உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்,உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள்” படிக்காமல் நான் கஷ்டப்பட்டேன்,நீங்கள் என்றுமே அதை அனுபவிக்க கூடாது.எனக்கு ரசிகனாய் இருந்தால் மட்டும் போதும் ,என்றுமே உங்களை என் சுயநலத்துகாக பயன் படுத்த மாட்டேன் என்பதாகும். இவ்வாறு ஒருவர் செய்ய வேண்டுமென்றால் அவர் மக்கள் மனதில் தனி இடம் பெற்றிருக்க வேண்டும்.அவர் தான் தன் உழைப்பால் மாபெரும் இடத்தை அடைந்த,பட்டம் பதவிகளை விரும்பாத, வீரமான ,எளிமையான தல அஜித் குமார்.
அவர் சூப்பர் ஸ்டார் இல்ல அதுக்கும் மேல என்று பிரபல வார நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.