கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தூங்காவனம்’. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.பணத்திற்காக எந்த வேலையையும் செய்யுக்கூடிய போலீஸ் அதிகாரியாக கமல். போதைப் பொருள் கடத்தி வருபவராக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். அவரிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை கடத்துகிறார் கமல், அதை மற்றொரு போலீசான த்ரிஷா பார்த்து விடுகிறார். கமலின் மகனை பிரகாஷ்ராஜ் கடத்தி, அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல் போதைப் பொருளை திருப்பி கொடுக்க நினைக்கிறார். ஆனால் அவர் பதுக்கி வைத்த இடத்தில் போதைப் பொருள் காணாமல் போகிறது. இதனால் குழம்பி போகும் கமல், எப்படி தன் மகனை மீட்டார்? அந்த போதைப் பொருளை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.விஸ்வரூபம் படத்திற்கு பிறகு சென்டிமென்ட் கதைகளில் நடித்துவந்த கமல் ஆக்ஷனில் மிரட்டுகிறார். த்ரிஷா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் இப்படம் முக்கிய இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். கமலை ஆட்டி வைக்கும் காட்சிகளில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து கைதட்டல்களை பெருகிறார்.படத்தில் ஒரே ஒரு பாடல், வைக்கவே முதலில் தைரியம் வேண்டும்.தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம். படம் முடியும் போது இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்துவிட்டதா, என்றளவிற்கு இயக்கியிருக்கிறார்.
-
Share This!
தூங்காவனம் திரை விமர்சனம்
You may also like
About the author
Anish
அண்மைய பதிவுகள்
ஆவண காப்பகங்கள்
- நவம்பர் 2023
- ஏப்ரல் 2022
- ஜூன் 2020
- மே 2020
- நவம்பர் 2018
- மார்ச் 2018
- பிப்ரவரி 2018
- ஜனவரி 2018
- நவம்பர் 2017
- ஜூலை 2017
- ஜூன் 2017
- மே 2017
- ஏப்ரல் 2017
- பிப்ரவரி 2017
- டிசம்பர் 2016
- அக்டோபர் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- ஜனவரி 2016
- நவம்பர் 2015
- அக்டோபர் 2015
- செப்டம்பர் 2015
- ஜூலை 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- ஜனவரி 2015
- செப்டம்பர் 2014
- ஜூன் 2014
- மே 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- டிசம்பர் 2013
- ஆகஸ்ட் 2013