தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார்? என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இதில், ரஜினிகாந்த், கமல், மம்முட்டி, மோகன்லால், அஜித், விஜய், புனித் ராஜ்குமார், மகேஷ் பாபு, பவன் கல்யாண், ரவி தேஜா ஆகியோர் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து வாக்களித்து வருகிறார்கள்.
இந்த பட்டியலில் தற்போதுவரை விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் அஜித் இருக்கிறார். மகேஷ் பாபு மூன்றாவது இடத்தையும் பவன் கல்யாண் 4-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் இந்த பட்டியலில் 5-வது இடத்தை பெற்றுள்ளார். மேலும், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால்-மம்முட்டிக்கு 8-9 ஆகிய இடங்கள் கிடைத்துள்ளது. உலக நாயகன் கமலஹாசன் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் விஜய்-க்கும் அஜித்துக்கும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே இருக்கிறது. இந்த வாக்கெடுப்பின் இறுதியில்தான் யார் முதலிடத்தை பிடிப்பார்கள் என தெரிய வரும். இருப்பினும், அஜித்-விஜய் தற்போதைய சூப்பர் ஸ்டார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.