இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி சமீபத்தில் 100வது வெற்றி நாள் என்ற மைல்கல்லை கடந்தது. ‘தெறி’ படத்திற்கு பின்னர் ‘கபாலி’ உள்பட பல படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் ‘தெறி’யின் வசூல் திருப்திகரமாகவே இருந்து வருகிறது.
100வது நாளிற்கு பின் சென்னையில் கடந்த வார இறுதியில் 9 காட்சிகள் ஓடிய ‘தெறி’ படம் ரூ.20,160 வசூல் செய்துள்ளதோடு தியேட்டரில் 55% இருக்கைகள் நிறைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் இந்த படம் ரூ.11.90 கோடி இதுவரை வசூல் செய்து அதிகபட்ச ‘சென்னை வசூல்’ என்ற சாதனையையும் பெற்றுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இந்த ஆண்டின் வெற்றி தயாரிப்பாளர் என்ற பெருமையை பெறுகிறார். இவர் தயாரித்த ‘தெறி’ ஏற்கனவே சாதனை வசூலை பெற்றுள்ள நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கபாலி’ படமும் இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. கலைப்புலி தாணு அவர்களுக்கு 2016ஆம் ஆண்டு மறக்க முடியாத வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.