Cinema Entertainment

15 மில்லியனைக் கடந்த ‘நெருப்புடா…’

‘கபாலி’ படம் என்றவுடனே உடனடியாக ஞாபகத்திற்கு வருவது ‘நெருப்புடா…’ பாடல்தான். ‘கபாலி’ படத்தின் முதல் டீசர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட போதே அந்த டீசரில் இடம் பெற்றிருந்த ‘நெருப்புடா…’ பாடல் தீயாய் பரவியது. அடுத்து ‘கபாலி’ படத்தின் பாடல்கள் வெளியான பின் ‘நெருப்புடா பாடல்தான் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. அதனால், உடனே ‘நெருப்புடா…’ பாடலின் டீசரை தனியாகவும் வெளியிட்டனர். அந்த டீசரும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘கபாலி’ பாடல்கள் யு டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட அந்த நிமிடத்திலிருந்தே ‘நெருப்புடா…’ பாடல் சூப்பர் ஹிட் வரிசையில் சேர்ந்துவிட்டது. இதுவரை அந்தப் பாடலை 83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்துள்ளனர். 64 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

‘கபாலி’ நெருப்புடா…டீசரை 69 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த டீசரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். வெறும் 35 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரை இவ்வளவு பேர் ரசிப்பது ஒரு புதிய சாதனைதான். இந்த நெருப்புடான என்ற பாடல் மற்றும் டீசரையும் சேர்த்து சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமானபேர் ரசித்துள்ள்ளார்.

‘கபாலி’ படத்தின் இரண்டு டீசர்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகாதா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

image