>பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தனது உடல்நலம் காரணமாக இந்த ஆண்டு மேடை கச்சேரிகள் எதுவும் செய்யாமல் இருந்தார். தற்போது முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால் கச்சேரி நடத்த முடிவு செய்திருக்கிறார்.வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் எஸ்.பி.பி இசைச்சாரல் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தனது பிரபலமான பாடல்களை தன்னுடன் பாடிய பாடகிகளுடன் தொடர்ந்து பாடுகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இப்படி அவர் தொடர்ந்து பாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பாட இருக்கிறார். இந்த நிகழ்சிக்கு எம்.கே.டி.ராஜா வின் தீம் திரனா இசைக்குழு இசை அமைக்கிறது. கடையம்ராஜு இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
3 மணி நேரம் தொடர்ந்து பாடுகிறார் எஸ்.பி.பி…!!!
