History

புகையிலை தடை செய்த முதல் நாடு அயர்லாந்து: மார்ச் 29- 2004

 அயர்லாந்து அரசு 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தது. இதன்மூலம் வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை அயர்லாந்து பெற்றது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார். * 1831 – துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது. * 1849 – பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது. * 1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

* 1867 – கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1-ல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரசு ஒப்புதலை அளித்தார். * 1879 – ஆங்கிலோ-சூலு போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர். * 1886 – ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.