நகர்ந்துகொண்டே பேசக்கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் செல்போன் என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. செல்போன்களுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பி தொடர்பு தேவையில்லை. உலகின் முதலாவது செல்போன் அழைப்பு நியூயார்க் நகரில் 1973-ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்த செல்போன்கள் நகர்புறம் முதல் நாட்டுப்புறம் வரை பரவியுள்ளன. செல்போன்களின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் செல்போன் என்பது ஒரு அந்தஸ்து குறியாக இருந்தபோதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்
* 1917 – வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.
* 1922 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச்செயலாளரானார்.
* 1933 – நாசி ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
* 1948 – தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
* 1958 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.
* 1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர்.