History

ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889

 1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது.

1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி இது கட்டப்பட்டது.

அக்காலத்தில் பாதுகாப்பு தரத்தை கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது.

இக்கோபுரம் அதன் உச்சியிலுள்ள 20 மீட்டர் உயரமுள்ள தொலைகாட்சி ஆண்டனாவை சேர்க்காமல், 986 அடி உயரமானது. 10 ஆயிரம் டன்கள் எடை கொண்டது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது உலகின் அதிக உயரமான கோபுரம் இதுவேயாகும்.

இதன் பராமரிப்புக்காக ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலை மாறும்போது உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக ஈபிள் கோபுரத்தில் உயரத்தில் பல சதுர மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.

இக்கோபுரம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதை பார்க்க வருகிறார்கள். இக்கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28-ஆம் தேதி பெற்றது. இது கட்டப்பட்ட காலத்தில் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காது என்றே கருதினார்கள்.

ஆனால், இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக் கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909-ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபிள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

* 1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

* 1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.

* 1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

• 1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.

* 1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

* 1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.

* 1979 – மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.

* 1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.

* 2004 – கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.