வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்…டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன.
ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை(மோடி மஸ்தான்கள் ) விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.
வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உள்ளார்கள் இந்த ஊடக விபச்சாரர்கள்….!
வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஒன்பது ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.
வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?
வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?
ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !
வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.
வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….
வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.
வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?
இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?!!!!!!!!
இதையெல்லாம் இந்த ஊடக விபச்சாரர்கள் ஊதி பெரிதாக்கி தமிழனை காலம் காலமாகவே முட்டாளாக்கி கொண்டிருகிறது …நீதிவான்கள் ,சிந்தனைவாதிகள் அனைவரும் ஊடகம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும் உண்மையை உலகிற்கு உணர்த்த …இந்த பொய் பிரச்சாரத்தை மெய்பிக்கும் வகையில் இப்போது வெளிடப்பட்ட வனயூத்தம் என்ற திரைப்படத்திலும் வில்லனாக சித்தரித்தும் ,ஆளுங்கட்சிக்கு சோப்பும் போடப்பட்டுள்ளது என்பது இந்த கயவர்கள் எதுவரை ஊடுருவி உள்ளார்கள் என்பது சிந்திக்க வேண்டும்….
நம்மை பொறுத்தவரை வீரப்பன் கொஞ்சம் கெட்ட போராளி அவள்ளவே !!!