Indians

“உயிர் பெற்ற” கங்கை….

இந்தியாவின் பெருமைமிகு நதிகளில் ஒன்றான கங்கை நதியும் அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் “உயிருள்ள நபர்கள்” என்று இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலையின் பனிமுகடு வேகமாக உருகிவருகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் 850 மீட்டர் அளவுக்கு அது குன்றியுள்ளது.

எனவே இந்த பனிமுகட்டை உயிருள்ள நபராக இந்திய நீதிமன்றம் அறிவித்திருப்பது அதை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 450 மில்லியன் மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் கங்கை நதியை பல்லாயிரம் பக்தர்கள் புனிதமானதாக வழிபடுகிறார்கள்.

இந்துக்கள் தமது பாவங்களை கங்கையில் குளித்து நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இறந்தவர்களின் அஸ்தியும் இந்த நதியின் நீரில் கரைக்கப்படுகிறது.

அதேசமயம் ஏராளமான கழிவுகளும், மலஜலமும் இந்த நதியில் கொட்டப்படுவதால் கங்கை நதி மிக மோசமாக மாசடைந்துள்ளது.

தற்போது நீதிமன்றம் அளித்திருக்கும் “உயிருள்ளமனித” அங்கீகாரத்தின் மூலம் கங்கை நதியும் அதன் தோற்றுவாயான இமயமலை பனிமுகடும் சட்டப்பாதுகாப்பை பெற்றுள்ளன.