Life Tips Science

பாதுகாப்பு அம்சம் உங்கள் காரில் இருந்தால் சேஃப்..!

பாடி பேனல்

எந்த ஒரு காருக்கும் பாதுகாப்பை முதலில் அளிப்பது வலுவான, தரமுடைய பாடி பேனல்கள்தான். இதற்காக தற்போது வெளிநாடுகளில் உள்ளதைப்போன்ற கிராஷ் டெஸ்ட் மையங்கள் நம்மூரிலும் அமைக்கப்படுகின்றது. தரமான பாடி பேனல்கள் உங்கள் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை கார் நிறுவனத்தாரிடம் முதலில் கேட்டுத்தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அப்படி தரமான கட்டமைப்பு இல்லாத காரானது, விபத்தில் சிக்கும் சமயத்தில் முற்றிலும் உருக்குலைந்து அதில் பயணிக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

ஏபிஎஸ்

ஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும்பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சுழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. திடீரென பிரேக் பிடிக்கும் பொழுது வாகனம் நிலை தடுமாறிவிடும். ஆனால் ஏபிஎஸ் பயன்படுத்தப்பட்ட வாகனம் நிலை தடுமாறுவது தடுக்கப்படும். சாதாரண பிரேக்கை விட, அதற்கு முன்பான தூரத்திலே வாகனத்தை நிறுத்திவிடலாம். வளைவுகளில் இயல்பாக வாகனத்தை இயக்கமுடியும். மழை காலங்களில் ஈரமான சாலைகள் மற்றும் சறுக்கலான சாலைகளிலும் இயல்பாக பயணிக்க உதவும். இப்படி பல நன்மைகள் இதில் உள்ளது.

லேன் கீப்பிங் அஸிஸ்ட்

இது ஒரு புதிய தலைமுறை பாதுகாப்பு அம்சம் ஆகும். பாதுகாப்பான டிரைவிங் என்பது ஒழுக்கமாகவும், ஒரே சீராகவும் ஒரே லேணில் காரை செலுத்துவதே ஆகும். ஒரு லேணில் இருந்து மற்றொரு லேணுக்கு மாறும்போது லேன் கீப்பிங் அஸிஸ்ட் தொழில்நுட்பம் ஓட்டுநருக்கு எச்சரிப்பதுடன், நாம் பயணிக்கும் லேணிற்கு மெதுவாக மீண்டும் காரை செலுத்த உதவுகிறது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்

பாதுகாப்பான டிரைவிங்கை உறுதிப்படுத்த ஓட்டுநருக்கு உதவும் ஒரு அற்புதமான தொழில்நுட்பம் இது. வாகனத்தின் கண்ட்டோல் சிதறி செல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் இதனை சென்சார்கள் உறுதிப்படுத்துகின்றன, அப்படி தவறான அம்சங்கள் தென்பட்டால் தானாகவே செயல்பட்டு பிரேக்கை அப்ளை செய்கிறது இந்த தொழில்நுட்பம்.

ரியர் வியூ கேமரா

ரிவர்ஸ் எடுக்கும்போது எதிலும் அடிபடாமல் காரை பாதுகாப்பதுடன், யாரும் காயம் அடையாமல் நம்மையும் காக்க முடிகிறது.

ஏர் பேக்குகள்

விபத்தில் சிக்கினால் காரில் உள்ளவர்களின் உயிரை பாதுகாப்பதில் ஏர் பேக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார் விபத்தில் சிக்கினால் ஏர் பேக்குகள் தானாக விரிவடைந்து காரின் சிதறல்கள் நம்மீது படாமலும், காயம்படாமல் பாதுகாப்பதிலும் ஏர் பேக்குகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.

பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன்

மேற்கூறியதை போலவே இதுவும் ஒரு புதிய தலைமுறை தொழில்நுட்பமே. இது அதிக விலை கொண்ட கார்களில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தாலும் இதன் பயன் அளப்பரியது. ஓட்டுநரின் பார்வைக்கு புலப்படாத பகுதிகள் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகிறது. அந்த பகுதிகளில் இருந்து கார், அல்லது வேறு ஏதாவது பொருள் மீது இடித்துவிடாமல் இது ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளிக்கிறது.