மனிதர்களை அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடிய நோயாக புற்றுநோய் விளங்குகின்றது.
இந்நோய் பல்வேறு வகையாக மனிதர்களை தாக்கக்கூடியதாக காணப்படுகின்றது. இதேவேளை தற்போது குழந்தைகளையும் அரிய வகை புற்றுநோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான காரணத்தை கண்டறிய சிரமப்படும் விஞ்ஞானிகள் தற்போது புதியமுறை ஒன்றினை கையாளவுள்ளனர்.
இதன்படி 100 வருடங்களுக்கு முன்னர் சேமித்து வைக்கப்பட்டிருந்த உடல் கட்டிகளை (Tumours) ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளனர்.
தற்போது குறித்த புற்றுநோய் தாக்கத்திற்கு உட்பட்டவர்களிடமிருந்து இழையங்களை பெறுவது கடினமாக இருப்பதனால் இம் முறையை கையாளவுள்ளனர்.
இந்த மாதிரி கட்டிகள் திரவ நைதரசனில் இட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள Wellcome Trust Sanger எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.