Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அமெரிக்காவை எரித்து சாம்பலாக்குவோம் – ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மிரளவைக்கும் வீடியோ !!!

சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது இணையதளத்தில் அமெரிக்காவிற்கு எதிரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் தீவிரவாதிகள் பேசியதாவது :

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு இனி துளியும் பாதுகாப்பு இருக்காது என்றும் அமெரிக்காவில் உள்ள தீவிரவாதிகள் அவர்களுக்கு எதிரான தாக்குதலை தொடருங்கள் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அல்லாவின் விருப்பத்திற்கு உட்பட்டு, அமெரிக்கர்களின் மனதில் பயத்தை விதைக்க போராட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறிய தீவிரவாதிகள், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதலை விரைவில் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் தங்களுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நடத்தும் வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த மாபெறும் தாக்குதல் நிகழவிருப்பதாக தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

அந்த வீடியோ வை பார்க்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் ….

http://www.dailymail.co.uk/video/news/video-1174853/ISIS-warn-attacks-USA-release-highlights-reel.html

Exit mobile version