பெல்ஜியத்தில் தீவிரவாதிகளை தேடும் பணிக்காக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் அச்சம் அடையாமல் சமூக ஊடகங்களில் பூனைப் படங்களை பதிவேற்றி ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பியி ருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர். பெல்ஜியத்தை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத குழு தாக்குதலை தலைமையேற்று நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
பாரீஸை தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணிகள் நடந்து வந்தன.
போலீஸாரின் நடவடிக்கைகள் தீவிரவாதிகளுக்கு தெரிந்து அவர்கள் உஷாரடையக் கூடும் என்பதால் எந்தவொரு தகவலை யும் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தவிர வீடு களை விட்டு வெளியே வர வேண் டாம் என்றும் ஜன்னல்களுக்கு அருகில் வராமல் வீட்டுக்குள் பாதுகாப்பான இடத்தில் இருக்கும் படியும் பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப் பட்டன. சுரங்கப்பாதை ரயில் உட்பட முக்கிய போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது.
பாரீஸ் போன்ற தீவிரவாத தாக்கு தல்கள் நடக்கக்கூடும் என்ற அச்சத்தில் அரசு இந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட அதே நேரத்தில், பொதுமக்கள் தங்களது மன தைரியத்தை இழந்துவிடாமல் ‘ட்விட்டரில்’ பூனைகளை ஐஎஸ் தீவிரவாதிகளாக சித்தரித்து ஆயிரக்கணக்கான படங்களை பதிவேற்றினர். போலீஸ் நடவடிக்கையை கசியவிடாமல் ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பும் வகையில் பெல்ஜியம் மக்கள் ஒரே மாதிரியாக பூனை படங்களை ‘ட்விட்டரில்’ பதவியேற்றியது உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இதற்கிடையில் பாரீஸில் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி சாலா அப்தேஸ்லா முடன் காரில் சென்ற அப்ரினி (30), என்ற தீவிரவாதிக்கு எதிராக பெல்ஜியம் அரசு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் பெல்ஜியத்தின் ரெஸ்ஸன்ஸ் என்ற இடத்தில் காருக்கு எரிபொருள் நிரப்பியபோது ரகசிய கேமிராவில் பதிவான அப்ரினியின் புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ளது.