World

ஈரான் – இராக்கில் பயங்கர நிலநடுக்கம்: உயிர் பிழைக்க பதறி ஓடும் மக்கள் – வைரலாகும் வீடியோ

சிசிடிவியில் பதிவான காட்சி

ஈராக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

ஈரான் மற்றும் இராக்கில் இன்று (திங்கட்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் குர்திஸ்தான் மாகாணத்தின் பெஞ்வின் என்னுமிடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை 168 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்னிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.