Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இந்திய ரசிகர்களை விடவும் அதிகமாக தன் நாட்டு ரசிகர்கள் வர கிளார்க் அழைப்பு !!!!

சிட்னி

உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்தியாவும் -ஆஸ்திரேலியாவும் வருகிற 26 ந்தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்தமைதானம் 42 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து காணமுடியும்.இந்த போட்டிக்கான 75 சதவீத டிக்கெட்டுகளை இந்திய ரசிகர்கள் வாங்கி உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் நம்புகிறார்கள்.

இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டனும் ,வார்னரும் தங்கள் டுவிட்டரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கு வந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு தர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துஉள்ளனர்.

மேலும் கோல்டுஅவுட் (#goldout)என்ற ஹேஸ்டேக் உருவாக்கி அதற்கும் ஆதரவு தருமாறு கேட்டுஉள்ளனர்.

தங்கள் டுவிட்டரில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

”நான் வியாழக்கிழமை நடக்கும் போட்டிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் காதலர்கள் அனைவரையும் அழைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை” என்று கிளார்க்கும் வார்னரும் தங்கள் டுவிட்டரில் கூறி உள்ளனர்.

Exit mobile version