தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார்? என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்து கேட்டு வந்த நிலையில் மீண்டும் தென்னிந்தியாவின் சிறந்த டான்சர் யார்? என்று பிரபல இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இதில், விஜய் , அல்லு அர்ஜுன் ,ஜூனியர் என் டி ஆர் , சிம்பு , சூர்யா , தனுஷ் , ராம் சரண் ஆகியோர் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான டான்ஸ் நடிகர்களை தேர்ந்தெடுத்து வாக்களித்து வருகிறார்கள்.
இந்த பட்டியலில் தற்போதுவரை தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் இளையதளபதி விஜய் இருக்கிறார். அல்லு அர்ஜுன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்
இந்த பட்டியலில் விஜய்-க்கும் என் டி ஆர் க்கும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே இருக்கிறது. இந்த வாக்கெடுப்பின் இறுதியில்தான் யார் முதலிடத்தை பிடிப்பார்கள் என தெரிய வரும்.
உங்களுக்கு பிடித்த நடன நடிகருக்கு வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்