Flash

வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு… நாளை மாலை 6 மணிக்கு மேல் பெட்ரோல் போட முடியாது..

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களும் ஏப்ரல் 11 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில்,, “ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதத்தில் விற்பனையாளர்களின் விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். விற்பனை நிலையங்களில் உள்ள பிற வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் கொடுத்துள்ள குத்தகை நிலத்தை திரும்பப் பெறுவதற்கான கொள்கை வரைவு எளிதாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய அளவில் உள்ள 53 ஆயிரம் சில்லறை விற்பனை நிலையங்களும் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்வதில்லை எனவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விற்பனை நிலையங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அன்றைய தினம் அரசுக்கு ரூ.300 கோடி கலால் வரி இழப்பும், ரூ.725 கோடிக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.