Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ரூ.1க்கு விற்பனை செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

Advertisements

இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

புதுடெல்லி:
இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான சியோமி நிறுவனம் Mi ஃபேன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் சிறப்பு விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது. சியோமியின் Mi.com தளத்தில் இதற்கென பல்வேறு சாதனங்களை விற்பனைக்கு வழங்க சியோமி திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையின் கீழ் ரூ.1 பிளாஷ் விற்பனையும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு இலவசங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவுள்ளது.
ரூ.1க்கு கிடைக்கும் சாதனங்கள்:
விற்பனையின் முதற்கட்டமாக ரூ.1 பிளாஷ் விற்பனை நடைபெறவுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ரூ.1க்கு வாங்க முடியும். இந்த சலுகை செயலியில் மட்டும் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் செயலியை டவுன்லோடு செய்து விற்பனையில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும். இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு சிறப்பு விற்பனை துவங்கும்.
Exit mobile version