Sports

உலக கோப்பை நாளைய போட்டியில் வங்காளதேசத்தை வெளியேற்றுமா இந்தியா? இரு அணிகளின் பலம் என்ன?

மெல்போர்ன்,

உலக கோப்பை போட்டியின் 2-வது கால்இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தில் நடப்பு சாம்பியனான இந்திய- வங்காளதேச அணியுடன் மோதுகிறது.இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இப்போட்டி தொடங்கும்.இதற்காக இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

டோனி தலைமையிலான இந்திய அணி ’லீக்’ ஆட் டத்தில் 6 போட்டியிலும் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங், பவுலிங்கில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

’க்அவுட்’ என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடன் விளையாட வேண்டும். கொஞ்சம் அசந்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். அதோடு வங்காளதேச அணியை குறைத்து மதிப்பீட்டு விடக் கூடாது. ஏனென்றால் அந்த அணி இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. மேலும் நியூசிலாந்திடம் போரா டியே தோற்றது. இதனால் வங்காளதேச அணி இந்தியா வுக்கு கடும் சவாலாக இருக் கும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் தவான், வீராட் கோலி, ரெய்னா, கேப்டன் டோனி, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தவான் 2 சதமும், வீராட் கோலி, ரெய்னா தலா ஒரு செஞ் சூரியை அடித்துள்ள னர்.ஒருநாள் போட்டியில் இரண்டு இரட்டை சதம் அடித்த ரோகித்சர்மா இன்னும் சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தவில்லை. மிகவும் முக்கியமான கால் இறுதியில் அவர் தனது திறமையை வெளிப் படுத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதே போல ஜடேஜாவும் பேட்டிங் கில் நெருக்கடியில் உள் ளார்.
பந்துவீச்சில் முகமதுசமி, அஸ்வின் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். இருவர் மீதான எதிர்பார்ப்பு அதிக மாகவே இருக்கிறது. மொகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் நேர்த்தியான முறையில் பந்துவீசி வரு கிறார்கள்.

வங்காளதேச அணி 3 வெற்றி, ஒரு முடிவு இல்லை. ஒரு தோல்வியுடன் கால் இறுதிக்கு நுழைந்துள்ளது. அந்த அணியில் மகமதுல்லா (344 ரன்), முஷ்பிக்குர் ரகீம் (271 ரன்), முன்னாள்கேப்டன் சகீப்-அல்-ஹசன், தமீம் இக்பால் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். மகமதுல்லா தொடர்ந்து 2 செஞ்சூரி அடித்து முத்திரை பதித்துள்ளார்.

கேப்டன் மொர்தாசா, ரூபல்உசேன் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரூபல்உசேன் 4 விக்கெட் கைப்பற்றி முக்கிய பங்கு வகித்தார். சுழற்பந்து வீச்சில் சகிப்-அல்-ஹசன் நேர்த்தியாக வீசக்கூடியவர்.

2007 உலக கோப்பையில் இந்திய அணியை முதல் சுற்றிலேயே வெளியேற்றிய அந்த அணி தற்போதும் அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத் தில் உள்ளது.

இரு அணிகளும் ஆஸ்திரே லியாவில் மோத இருப்பது இதுவே முதல் முறையாகும். கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால் கடைசியாக மோதிய ஆட்டத்தில் இந்திய அணி தோற்றது. 2012-ம் ஆண்டு மார்ச் 16-ந்தேதி நடந்த ஆசிய கோப்பையில் 5 விக்கெட்டில் வங்காளதேசத்திடம் தோற் றது.

இந்திய அணி இந்த தொடரில் 6 ஆட்டத்திலும் எதிர்அணியை ’ஆல்-அவுட்’ செய்தது. இதேபோல வங்காளதேச அணியையும் கால்இறுதியல் ’ஆல்-அவுட்’ செய்யுமா? என்று எதிர் பார்க்கப்பட்டது. ’லீக்’ சுற்றில் 2 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தும், 4 ஆட் டத்தில் 2-வது பேட்டிங் செய்தும் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் மெல்போர்ன் மைதானத்தில்தான் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி வங்காளதேசத்திடம் 3 முறை தோல்வி அடைந்துள்ளது.2004-ம் ஆண்டு டாக்காவில் நடந்த ஆட்டத்தில் 15 ரன்னில் முதல் முறையாக தோற்றது. 2007 உலக கோப்பையில் 5 விக்கெட்டிலும், கடைசியாக 2012 ஆசிய கோப்பையில் 5 விக்கெட்டிலும் தோற்றது. இந்திய அணி 24 தடவை வங்காளதேசத்தை வீழ்த்தி உள்ளது.

டோனி தலைமையில் 100-வது வெற்றி நாளை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 176 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார். 99 ஆட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. 62 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 4 ஆட்டம் ’டை’யில் முடிந்தது. 11 ஆட்டம் முடிவு இல்லை.

இந்தியாவும், வங்கதேசமும் இப்போதுதான் முதல் முறையாக உலக கோப்பை காலிறுதியில் சந்திக்கின்றன. இதற்கு முன்பு, லீக் ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன.

இரு அணிகளும் உலக கோப்பையில் இதுவரை 2 முறை மோதியுள்ளன. 2007 உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியாவை வங்கதேசம் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தது. 2011ல் டோணி தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி பழி தீர்த்தது. ஆக, உலக கோப்பையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாக இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது

உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இரு இந்திய வீரர்கள் சதம் அடித்துள்ளனர். வீரேந்திர சேவாக் 175 ரன்களும், கோலி 100 ரன்களும் விளாசியுள்ளனர். இருவருமே 2011ல் நடந்த போட்டியில்தான் இந்த சதங்களை விளாசினர்.

2007 உலக கோப்பையில், கேப்டனாக இன்றி, களம் கண்ட டோணி, 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். 2011 உலக கோப்பையில், டோணி களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

வங்கதேச வீரர்களில் யாரும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தது இல்லை. 2011ல் தமிம் இக்பால் அதிகபட்சமாக 70 ரன்களை அடித்தார்.
2011 உலக கோப்பையில்தான் விராட் கோஹ்லி முதல்முறையாக உலக கோப்பை தொடரில் கால் பதித்தார். முதல் போட்டியிலேயே வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்தார்.

கடந்த உலக கோப்பை தொடரில் மோதியபோது இருந்த 6 வீரர்கள் வங்கதேசத்தில் இந்த உலக கோப்பையிலும் ஆடுகின்றனர். இந்தியாவை பொறுத்தளவில், டோணி மற்றும் கோஹ்லி ஆகியோர் மட்டுமே பழைய அணியில் இருந்தவர்களாகும்.

ஒட்டுமொத்தமாக இதுவரை இவ்விரு அணிகளும் 29 ஒரு நாள் போட்டிகளில், சந்தித்துள்ளன. அதில், இந்தியா 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் ரிசல்ட் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில், முதல் முறையாக இந்தியா, வங்கதேச அணிகள் மோத உள்ளன.