Sports

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது

கொல்கத்தா,

2008 மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் போட்டித் தொடரை இந்தியா ரத்து செய்தது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக போட்டிகளில் இரு அணி களும் நேரிடையாக மோதி வந்தன. இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் புதுப்பிக்க பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. இதற்கு எந்த பலனும் ஏற்படவில்லை.

இதற்கிடையே கடந்த வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகார்யார் கான் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய செய லாளர் அனுராக் தாக்கூரை சந்தித்து பேசினார்.
அப்போது இரு நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த அனுராக் தாக்கூரிடம் அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசித் கூறியுள்ளார்.
இந்த போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர் நீண்ட இடைவேளைக்கு பிறகு டிசம்பர் மாதம் நடைபெறு கிறது. இதற்காக நாங்கள் மிகவும் கடுமையாக போராடி இருக்கிறோம். இந்தப் போட்டித் தொடர் இந்தியாவிலோ அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சிலோ நடைபெறலாம்.உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விரும்புகிறேன். இதற்காக ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்தியா – வங்காள தேசம் மோதும் போட்டி யில் இந்தியாவுக்காக உற்சாகப்படுத்துவேன். ஏனென்றால் நான் இந்தியாவுக்கான தூதராக இருக்கிறேன். வங்காளதேசத்துக்கு தூதராக இருந்தால் அந்த நாட்டுக்காக உற்சாகப்படுத்துவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.