Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

சச்சின் பள்ளி நண்பனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்

Advertisements
    சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் பள்ளியில் படிக்கும் போது பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டி ஒன்றில் 664 ரன்கள் குவித்தனர். இந்த உலக சாதனை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டில் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் தனது கடைசிப் போட்டியை விளையாடிய சச்சின், போட்டிக்கு பிறகு தனக்கு உதவியவர்கள் மற்றும் நன்றிக்குறியவர்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
அப்போது, சச்சின் டெண்டுல்கர் பால்யகால சினேகிதனான வினோத் காம்ப்ளி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது குறித்து வினோத் காம்ப்ளியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் பிரிவு உபச்சார விழாவிற்கும் அவரை சச்சின் அழைக்கவில்லை.
இந்நிலையில்தான், நேற்று இன்ஸ்டாகிராமில் சச்சின் டெண்டுல்கர் வினோத் காம்ப்ளி மற்றுமொரு நண்பருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும், அந்த படத்தின் அடியில், ’பழைய நினைவுகளில் தங்கிப்போயுள்ளேன்’ என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
Exit mobile version