ரேவந்தா – சூரியனின் இளைய மகன். கயவாகனன் என அழைக்க பெறுபவன்.
மார்கண்டேய புராணமும், விஷ்ணுபுராணமும் , சூரியனின் மனைவி விஸ்வகர்கர்மாவின் மகள் சஞ்ஜனா சூரியனுக்கு தாக்குபிடிக்காது தன்னைப்போல் உற்பத்தி செய்த உருவம் சாயாக்கு பிறந்தவன் என்கிறது. நிழலுக்கு பிறந்தவன்.
மற்றொரு மனைவியான ராத்திரிக்கு பிறந்தவன் என குமார புராணமும், மட்சிய புராணமும் குறிக்கின்றன.
இவன் குதிரை வியாபாரக்கடவுள்.
இவன் ஏழுமுக குதிரை செல்லும் போது அக்குதிரை லஷ்மியை(லஷ்மிக்கு குதிரை ஆசை அதிகம்) வசிகரிக்க, அவளின் கேள்வியை உதாசீனம் செய்து சென்றதால் அவள் தன் கணவன் விஷ்ணு வழி அவனை பெண்குதிரையாக போக சபித்தாள் என்கிறது தேவி பாகவத புராணம்.
மார்கண்டேய புராணம் இவனை மறைந்து இருப்பவைகளின்(குகைவாசிகள்) தலைவனாக சூரியன் பணியமர்த்தியதாக கூறுகிறது. குபேரன் குகைவாசிகளில் ஒருவன் மறைந்திருந்து வழங்குபவன்.
கையில் மதுவோடும், காலில் பூட்ஸ்ஸோடும், வேட்டை நாயும், குகைவாசிகளும் பின் தொடர குதிரை மீதமர்ந்து வேட்டைக்கு வாள் போன்ற வேட்டைக்கருவிகளோடும், அவனின் அந்தஸ்தை குறிக்க தலை மீது குடையோடும் சிற்பங்களில் படைக்கப்பட்டிருப்பான்.
வேட்டையின் போது பாதுக்காப்பிற்கும், குதிரைவீரர்களின் பாதுக்காப்பிற்குமான கடவுள்.
ஷண்மதங்களின் ஒன்றான சௌரம் காணாமல் போனதால் ரிக் வேத கடவுளான இவனும் காணாமல் போனான்.
இவன் வழிபாடு குறித்து ஸபா கல்ப தர்மம் விவரிக்கும்.
சார்நாத் பகுதில் கிடைக்கப்பெற்ற ஏழாம் நூற்றாண்டு சிற்பம் இது.