நாசாவிண் வெளி ஆய்வு மையம் சூரியனின் மேற்பரப்பில் 2 மிகப்பெரிய துளைகள் இருப்பதை கண்டு பிடித்து உள்ளது.
சூரியனின் தென் துருவ பகுதியில் கோரோணல் எனப்பாட்டும் 2 மிகப்பெரிய துளைகள் உள்ளன. இதில் ஒரு துளை சூரியன் மேற்பரப்பில் 142 மில்லியன் மைல் பிடித்து உள்ளது 6 முதல் 8 சதவீதமாகும்.இந்த ஒரு பெரிய ஓட்டையை விஞ்ஞானிகள் பல சதாபதங்களாக கண்காணித்து வருகின்றனர். சிறிய சைஸ் துளையானது துருவத்தின் எதிர்முனையை நோக்கி உள்ளது.துளை நீண்டதும் குறுகியதுமாக உள்ளது. அது சூரியனின் மேற்பரப்பில் 3.8 மில்லியன் சதுர மைலை இடம் பிடித்து உள்ளது. இது சூரியனின் மேற்பரப்பில் 0.16 சதவீமாகும். கோரோணல் எனப்படும் துளைகள் சூரிய மேற்பரப்பில் குறைந்த அடர்த்தி மற்றும் வெப்பநிலை உள்ளபகுதிகளில் உள்ளன.துருவ ஒளிவட்ட துளைகள் ஐந்து ஆண்டுகள் அல்லது நீண்ட காலமாக காணப்படும். இந்த துளைகள் மாறிகோண்டே இருக்கும் தன்மை கொண்டது.இந்த கோரோணல் துளை பகுதியில் இருந்து தான் காந்த புலம் விண்வெளிக்கு செல்கிறது.
சூரியனை ஆராய்வதற்கான அனுப்பபட்ட நாசாவின் ஸோலார் டைனமிக் அப்ஸர்வேட்டரி எனும் விண்கலத்திலிருக்கும் ஹெலியோஸீஸ்மிக் அண்ட் மேக்னெட்டிக் இமேஜர் எனப்படும் டெலஸ்கோப் காமிரா இதனை ஜனவரி 2015 படம் பிடித்து அனுப்பி உள்ளது